திங்கள், 5 மே, 2014

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1mtMnXO

"தன்னையறியா மயக்கத்தால் ஆணவமும், தீய செயல்களால் பாவப் பதிவுகளும், புலன் மயக்கம் மாயையும், பெருகி இவையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களாகி துன்பங்களும் சிக்கல்களும் வாழ்வில் பெருகின. சிந்தனை உயர்ந்தபோது தனது மூன்று கலங்கங்களை போக்கிக் கொண்டு, அறிவைப் பெருக்கி முழுமையடைந்து, ஆதி நிலை வரைக்கும் விரிந்து அதோடு லயமாக அறிவு முற்படுகிறது. அதற்கு, ஒவ்வொருவரும் தனது தீயவினைப் பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். ஜீவகாந்த சக்தியை "குண்டலினியோகம்" எனும் அகத்தவப் பயிற்சியாலும் (Meditation), நல்ல செயல்களாலும் தூய்மை செய்து மாற்றியமைக்க வேண்டும். அப்படிச் செய்யச் செய்ய, அறிவாட்சித் தரம் (personality) உயர்ந்து விடும். தானும் மாறலாம். தனக்குப் பின்னால் வரக் கூடிய சந்ததிகளும் மாற்றியமைக்கப்படுவார்கள். "மனவளக்கலை" குண்டலினி யோக பயிற்சி - தற்சோதனை (Introspection), குண நல மேன்மை (Sublimation), முழுமைப் பேறு (Perfection) இவற்றை அடக்கமாகக் கொண்டதால், உயிர் விடுதலை பெற இது ஏற்ற நல்ல மனச் சாதனை முறை ஆகும். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அந்த இறைஆற்றலே அறிவாக அமைந்துள்ளது என்ற உணர்வு வருமேயானால், தீமை செய்ய முடியாது. எப்போதுமே செயலின் விளைவாக வருவது இறையாற்றலே தான். இந்த உண்மையை உணர்ந்தால் தான் மனிதன் நல்லவனாக வாழ முடியும். நன்மையே செய்ய முடியும். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக