புதன், 30 மே, 2012

நினைவாற்றல்

தூதுவளை கீரை நினைவாற்றல் தரும். அதனால் வாரம் ஒரு முறை சாம்பாரிலோ அல்லது துவையலிலோ சேர்த்து சாப்பிடவும் . இருமல் சளியை போக்கும் . உடலுக்கு சூட்டை தரும் .

செவ்வாய், 29 மே, 2012

மசாலா தயிர் சாதம்:

தேவையானவை:
காரட் - 1/2 காய் 
மாங்காய் - 1/4 காய் 
வெள்ளரிக்காய் - 1/2 காய் 
பச்சை மிளகாய் - 1 (பெரியது)
இஞ்சி - 1/2 இன்ச் 
கருவேப்பிலை - 4 இலை 
கொத்துமல்லி - 4 இலை
புதினா - 4 இலை
சீரகம் - 1/2 ஸ்பூன் 
பெருங்காயம் - 2 சிட்டிகை 
சாதம் - 1 தம்ளர் 
தயிர் - 3/4 தம்ளர் 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை:

காய்கள், இஞ்சி, ப.மிளகாய் துருவி, இலைகளை நறுக்கி, சீரகம், பெருங்காயம், உப்பு, தயிர் ஆகியவற்றை சிறிது நீருடன் கலந்து தளர பரிமாறவும்.




திங்கள், 28 மே, 2012

கால் வலிக்கு

கால் வலிக்கு எங்கு உட்கார்ந்தாலும் காலை மடித்து சப்பணமிட்டு உட்கார வலி  சிறிது சிறிதாக குறையும்,

ஞாயிறு, 27 மே, 2012

சில்லென்ற காற்றுக்கு:

வெயிலுக்கு, இரவு சன்னலில் டர்க்கி டவலை  நனைத்து பிழிந்து போட்டு படுக்க பேன் காற்றில் சூடு தணிந்து ஜில்லென இருக்கும்.

சனி, 26 மே, 2012

நோய் எதிர்ப்பு சக்திக்கு:

தினம் இரவு பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 3 சிட்டிகை மிளகுத்தூள், சர்க்கரை கலந்து சூட்டுடன் 1 மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து குடிக்கவும்.

புதன், 23 மே, 2012

மிளகு

1.இறந்த செல்களுக்கு உயிர் கொடுக்கும்.
2.தோல் வியாதி இருப்பவர் தினமும் சமையலில் சேர்த்து சாப்பிட உடல் தேறி புண் ஆறும்.

செவ்வாய், 22 மே, 2012

கெட்ட கொழுப்பு சேராதிருக்க

சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து 4 மிளகை மென்று சாப்பிட அடிவயிற்றில் கொழுப்பு தங்காமல், உடல் ஆரோக்யமாகவும், மெலிந்தும், அழகுடன் இருக்கலாம்.

குறிப்பு: மிளகு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து எதுவும் சாப்பிடவும். அப்பொழுதுதான் மிளகு வேலை செய்யும். நீர் மாத்திரம் குடிக்கலாம்.

திங்கள், 21 மே, 2012

மருதாணி

மருதாணியுடன் புளி அல்லது எளிமிச்சையை 2 ஸ்பூன் அளவு சாறாக எடுத்து கலந்து மெஹந்தி வைக்க நன்கு சிவக்கும், உடல் சூட்டையும் குறைக்கும் 

ஞாயிறு, 20 மே, 2012

சப்பாத்தி மாவு

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சூடான நீரை விட்டு உப்பு, எண்ணெய் போட்டு பிசைந்து அரை மணி நேரம் மூடி வைத்து, பிறகு திறந்து நன்கு பிசைந்து சுட மெத்தென்று இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.

வெள்ளி, 18 மே, 2012

தோல் பொருட்கள்


தோல் பொருட்கள்  மீது தேங்காய் எண்ணையை ஒரு பருத்தி துணியில்   தொட்டு  துடைக்க பளிச் என  இருக்கும்

வியாழன், 17 மே, 2012

செவ்வாய், 15 மே, 2012

புளிக்கு பதில்

புளிப்புள்ள கீரை, காய், பழங்கள் சேர்த்து சமைக்கலாம். புளி இரத்தம் சுண்டும், அதனால் புளிப்பு சுவைக்கு இப்படி செய்ய உடம்பிற்கும் நல்லது.

ஞாயிறு, 13 மே, 2012

உருளை ரவுண்டு பொரியல்

உருளை ரவுண்டு பொரியல்: உருளை கிழங்கை வட்டவட்டமாக அரிந்து   ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரிந்த காய்களை போட்டு சிறிது வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள் தூள்களுடன் உப்பும் தேவைக்கேற்ப சேர்த்து காய் மூழ்குமளவு நீர் விட்டு, வாணலியை மூடி வேகவைத்து, நீர் சுண்டியதும் சிறிது பெருங்காய தூள் சேர்த்து தோசைகல்லில் எண்ணெய் விட்டு, 6 ,7  வில்லைகளாக போட்டு வறுத்து, மறுபுறமும் திருப்பி வறுத்தெடுத்து சாப்பாட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சனி, 12 மே, 2012

ஹேர் பின் வளைந்து விட்டால்

ஹேர் பின் வளைந்து விட்டால், வாசக்கதவின் ஓரம் இணைத்துப்  பிடித்து கதவை மெல்ல மூடி திறந்து ஹேர் பின் பெண்டை சரி செய்து மீண்டும் உபயோகிக்கலாம்.

வெள்ளி, 11 மே, 2012

பெயிண்ட் வாசம் போக

பீரோ, அலமாரியில் பெயிண்ட் அடித்த வாசம்  போக ஊதுபத்தியின் காலி பாக்கெட்டுகளை போட்டு வைக்கவும் 

வியாழன், 10 மே, 2012

புதன், 9 மே, 2012

பீங்கான் பாத்திரம்

பீங்கான் பாத்திரத்தை induction & gas stove- இலும் பயன் படுத்தலாம். டிசைன் போட்டிருந்தாலும் பயன்படுத்தலாம்.

செவ்வாய், 8 மே, 2012

கரப்பானை கொல்லாமல் ஒழிக்க (2)

கரப்பானை கொல்லாமல் ஒழிக்க  போரிக் பவுடர் (boric  acid ) போட்டாலும்  இரவில் எங்கெங்கு கரப்பான் வருகிறதோ  அங்கெல்லாம் தூவி விட்டாலும் ஓடிவிடும்.

திங்கள், 7 மே, 2012

கரப்பானை கொல்லாமல் ஒழிக்க

லைப்பாய் நீம் Handwash liquid சிறிது நீருடன் கலந்து தெளிக்க அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி விடும்.

ஞாயிறு, 6 மே, 2012

காரப்பொரி

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணையை சுடவைத்து, கட்ட மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் ரெண்டு சிட்டிகை, பெருங்காய தூள் 2 சிட்டிகை, உப்பு (டேபிள் சால்ட்) தேவைக்கேற்ப, 2 பல் பூண்டு தட்டி போட்டு 3 நிமிடங்கள் வறுத்து 2 ஆழாக்கு (டம்ளர்) பொரியை கொட்டி கிளறவும். அப்படி கிளறும்போதே இதனுடன் வறுத்த வேர்கடலை 1 கரண்டி, அவல் 1/2 டம்ளர், உடைத்த கடலை 1 கரண்டி போட்டு கிளறி இறக்கவும்.

வெள்ளி, 4 மே, 2012