சனி, 30 ஜூன், 2012

துருபிடித்த ஆணிகள் கழற்ற

துருபிடித்த ஆணிகள் கழற்ற வரவில்லை எனில் சிங்கர் ஆயில் விட்டு நன்கு ஊறியதும் துடைத்து கழற்ற சுலபமாக வரும். துருவும் நீங்கிவிடும்.

எளிய மாம்பழ ஜூஸ்

மாம்பழத்தை நன்கு கசக்கி ஓரிடத்தில் ஓட்டை போட்டு சாரை உறிஞ்சி சாப்பிட நன்றாக இருக்கும். 

குழந்தைகள் புஷ்டியாக

மெலிந்து உள்ள குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நசுக்கி பால், சர்க்கரையுடன் இரவில் சாபிடத்தர குழந்தைகள் புஷ்டியாக வருவார்கள்.

வாழைக்கறை துணியில் பட்டுவிட்டால்

வாழைக்கறை துணியில் பட்டுவிட்டால் உடனே அவ்விடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்து கசக்கி நீர் ஊற்றி அலச கரைகள் போய் உடனடியாக துணி பழைய நிலைக்கு வந்து விடும்.

செவ்வாய், 26 ஜூன், 2012

படிக்கும் குழந்தைகள்

படிக்கும் குழந்தைகள் தூங்கிவழிவதை தடுக்க  ஒரு டம்ளர் பாலில் ஒரு ஏலக்காய் தட்டி கொதிக்கவிட்டு சர்க்கரை கலந்து சூட்டுடன் தரவும்.

திங்கள், 25 ஜூன், 2012

மசால் வடை

மசால் வடை செய்யும் போது வெங்காயத்திற்கு பதில் கோஸ் சேர்த்து செய்ய வாசனையாகவும், புது ருசியுடனும் இருக்கும்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

வெண்ணை காய்ச்சும்போது

வெண்ணை காய்ச்சும்போது கருவேப்பிலை 9 அல்லது 10 இலைகள் போட்டு காய்ச்சி இலைகளை எடுத்து விடவும். கடைசி ஸ்பூன் நெய் தீரும் வரை கெடாமல் வாசனையாகவும் இருக்கும்.

வெள்ளி, 22 ஜூன், 2012

புண்ணிருந்தால்

வாயிலோ உதட்டிலோ புண்ணிருந்தால் வெண்ணையை  விடாமல் தடவி வர விரைவில் ஆறிவிடும்.

வியாழன், 21 ஜூன், 2012

வெண்ணை

வெண்ணை காய்ச்சும்போது சடசடப்பு  இல்லாமல் காய இரண்டு கல் உப்பு  போட வெண்ணை  நன்கு  காயும் .

செவ்வாய், 19 ஜூன், 2012

பொரியல் - 2

கீரை, கோஸ் பொரியல் செய்யும் போது தேங்காய்க்கு பதில் ஒரு கைப்பிடி பாசிபருப்பை வதக்கும் போதே வேகவிட்டு செய்ய சுவையுடன் நன்றாக இருக்கும்.

திங்கள், 18 ஜூன், 2012

பொரியல்

தேங்காய் சேர்த்த பொரியலை சாப்பிட முடியாதவர்கள் பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பு  சேர்த்து சாப்பிடலாம்.  

ஞாயிறு, 17 ஜூன், 2012

இன்றைய குறிப்பு

தீராத தலைவலியா?: உடனடி நிவாரணம் இதோ: கொஞ்சம் சுக்கை நீர் விட்டு இழைத்து, நெற்றியிலிருந்து புருவம் வரை தேய்த்து விட்டால் பத்தே நிமிடத்தில் வலி போயே போச்!!

இன்றைய குறிப்பு

சட்னி, துவையல் அரைக்கும்போது ஓமம் அரை ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிடச்  சுவையாகவும் இருக்கும், ஜீரணமும் ஆகும்.

கிழங்குகள் வறுக்கும்போது

சேம்பு, உருளை இப்படிப்பட்ட கிழங்குகள்  வறுக்கும்போது சிறிது கடலை மாவு அல்லது அரிசி  மாவு கலந்து வறுக்க சீக்கிரமாக வறுபட்டும் மொறுமொறுப்பாக  இருக்கும் .

புதன், 13 ஜூன், 2012

வடை மாவு

வடை மாவு நீர்துவிட்டால், ஜவ்வரிசி, சேமியா, ஓட்ஸ் என எதாவது ஒன்றை ஒரு கைப்பிடி அளவு கலந்து அரை மணி கழித்து தட்ட கெட்டியான வடை கிடைக்கும். வடையும் புது சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

பற்களுக்கு

ஐஸ் க்ரீம் சாப்பிட்ட பிறகு வெற்றிலை அல்லது பீடா  போட்டு விட்டு வாய்  கொப்புளிக்க பற்களுக்கு பாதுகாப்பு தரும் 

சனி, 9 ஜூன், 2012

புண்ணாகாமல் இருக்க

குங்குமம் வைத்த நெற்றி காது மூக்கு தொங்கட்டான்கள் போட்டு புண்ணாகாமல் இருக்க வாழைப்பழ தோலின் வெள்ளையாக இருக்கும்  உட்பகுதியை தினமும் தேய்த்து பயன்படுத்தவும்.

வெள்ளி, 8 ஜூன், 2012

புண் ஆற

காது மூக்கில் கவரிங் நகைகள் போட்டு புண்ணாவதை தவிர்க்க களிப்பாக்குடன் நீர் விட்டு இழைத்து அவ்விடத்தில் போட்டு பிறகு நகைகளை அணிய விரைவில் புண் ஆறிவரும். 

வியாழன், 7 ஜூன், 2012

கேஸ்

கேஸ் அடுப்பில் உர் உர் என்று சத்தம் வந்தால் 'சிம்'மில் வைத்து இரண்டு முறை ஊதி விட சத்தமில்லாமல் சரியாக வேலை செய்யும்.

புதன், 6 ஜூன், 2012

மாவு

இட்லி, தோசைக்கு அரைக்கும் போது, 2 வெண்டை  காயையோ , 1 பிடி காம்புகளையோ சேர்த்தால் மெத்தென்ற பதத்துடன் வரும். மூட்டு வலிக்கும் நல்லது. 

திங்கள், 4 ஜூன், 2012

நாட்டு தக்காளி

நன்கு பழுத்த நாட்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்த நல்ல புளிப்புடனும், பார்க்க அழகாகவும் இருக்கும்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

உடல் பொலிவு

காய்கள், பழங்கள் நறுக்கும்போது, வரும் சாற்றை  முகம்,  காது, கழுத்து, கை கால்கள்  மீது தேய்த்து நன்கு காய்ந்ததும் சாதாரண  நீரில்  கழுவ தோல் மேல் உள்ள அழுக்கு நீங்கி பளிச்சென்றும் மிருதுவாகவும்  இருக்கும் .வாரம் ஒரு முறை செய்ய உடல் பொலிவுடன் விளங்கும்.

சனி, 2 ஜூன், 2012

கண்களுக்கு தெரியாத கிருமிகள்

கல்லுப்பை காய்கறி பழங்கள் அலசி கழுவும் நீரில் போட்டு கழுவி எடுக்க கண்களுக்கு தெரியாத கிருமிகள் நீரில் மிதந்து வந்துவிடும். மறுமுறை நீரில் கழுவி சாப்பிடவும்.

வெள்ளி, 1 ஜூன், 2012

தூசிகளை அகற்ற

டைல்ஸ், ஜன்னல், கதவுகளில் உள்ள மண் தூசிகளை அகற்ற மீடியம் பெயிண்ட் பிரஷ் பயன்படுத்தி அகற்ற சுலபமாக வரும்.