திங்கள், 16 மே, 2011

இன்றைய குறிப்பு

கோஸ், கேரட், பீன்ஸ், பீட்ரூட் பொரியல் செய்யும்போது மிளகாய் சேர்க்காமல், மிளகு தட்டிப்போட்டு தேங்காய் போட்டு கிளறி இறக்க, ருசியாகவும் இருக்கும், நன்கு ஜீரணமும் ஆகும்.

ஞாயிறு, 15 மே, 2011

இன்றைய குறிப்பு

எந்த பழம் வெட்டினாலும் அந்த சாறை முகம், கை, கழுத்து மற்றும் காலிலும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவிவிட மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

செவ்வாய், 10 மே, 2011

இன்றைய குறிப்பு

போட்டோ சுற்றிலும் வேப்பெண்ணை தடவிட பூச்சி அரிக்காமல் இருக்கும். சுவாமி படங்களுக்கும் செய்யலாம்.

திங்கள், 9 மே, 2011

இன்றைய குறிப்பு

தினம் பால் காய்ச்சும்போது வரும் பாலேட்டினை சிறிது தயிர் உறைவிட்டு ஒரு வாரம் பிரீசரில் வெய்க்கக்  கெடாமல் நன்றாக இருக்கும். இதைக்  கடைந்து வெண்ணை எடுக்கலாம்.

ஞாயிறு, 8 மே, 2011

இன்றைய குறிப்பு

பெரிய வெங்காயம் சுலபமாக உரிக்கவேண்டுமானால் இருபுறமும் வெட்டி நீரில் போட்டு பத்து நிமிடங்கள்  கழித்து தோல் உரித்து கழுவி நறுக்க தோலும் சுலபமாக வரும் கண்களில் நீர் வடியாது.

சனி, 7 மே, 2011

இன்றைய குறிப்பு

பாட்டில், கண்டைனர் திறக்கமுடியவில்லயானால், வாயால் மூடி  சுற்றிலும் ஊதினால் சுலபமாக திறக்கலாம்.

வெள்ளி, 6 மே, 2011

இன்றைய குறிப்பு

தலைக்குளிக்க கால் கிலோ சீக்காயுடன் ஒரு கிலோ அரிசி, ஐம்பது கிராம் வெந்தயம், சேர்த்து கொரகொரவென்று  அரைத்து ஒரு தலைக்கு வேண்டியளவு எடுத்து அதில் முக்கால் பங்கு சீக்காய்தூள் எடுத்து கொதிநீரை கொட்டி நன்கு கிளறி சிறிது சூடாறியபின் வேண்டிய அளவு நீர் கலந்து தலை கசக்க எண்ணெய் விட்டு  முடி சுத்தமாகவும், பளபளவெனவும், மெத்தென்றும் இருக்கும்.

வியாழன், 5 மே, 2011

இன்றைய குறிப்பு

தேங்காய் பர்பி செய்து திறக்கும் தருவாயில், பன்னீர் தெளித்து கிளறி தட்டில் கொட்டி ஆறவிட்டு வில்லைபோட்டு சாப்பிட வாயில் கரையும் அளவு ருசியாக இருக்கும்.

புதன், 4 மே, 2011

இன்றைய குறிப்பு

வீடு பெருக்கும் துடைப்பம் (ரங்கூன் துடைப்பம், பூந்துடைப்பம்) வாங்கினால், முதலில்  அதனை சுரசுரப்பான இடத்தில் தேய்க்க பூக்களெல்லாம் உதிர்ந்துவிடும். பிறகு ஈரத்தில் நனைத்து காயவைத்து பெருக்குவதற்குமுன் மறுபடியும் தேய்த்து தட்டிவிட்டு பெருக்கினால் அதில் உள்ள பூக்கள், முட்கள் அதிகமாக கொட்டாது. சிறிது, சிறிது இருந்தாலும் ஒரு வாரத்தில் கொட்டி சரியாகிவிடும்.

திங்கள், 2 மே, 2011

இன்றைய குறிப்பு

வாழைக்கறை, பீட்ரூட் கறை, கை பிசுபிசுப்பு போக கையில் எண்ணெய் அல்லது உப்பு(salt) போட்டு தேய்த்து பிறகு sabena அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ கைகள் சுத்தமாகிவிடும்.

ஞாயிறு, 1 மே, 2011

இன்றைய குறிப்பு

வீடு துடைப்பதற்கு முன் மூலைமுடுக்குகளில் சோப்பு நீரில் பழைய சாக்சை நனைத்து தேய்த்துவிட்டு துடைக்கும்போது அழுக்கு வந்துவிடும், பூச்சிகள் அண்டாது.