புதன், 14 நவம்பர், 2012

திங்கள், 12 நவம்பர், 2012

சூடான நீர்

குளிக்க, குடிக்க சூடான நீர் கிடைக்க குக்கரில் நீரை காய்ச்சவும். இதனால் எரிபொருள் சிக்கனமாகும்.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

புண் ஆற

கம்மல், மூக்குத்தி போட்டு புண்ணானால், கொட்டபாக்கினை அரைத்து, நீர் விட்டு இழைத்து தடவவும்.

சனி, 10 நவம்பர், 2012

கல் நகைகள்

கல் நகைகளில் எண்ணை ,நீர் இருந்தால் விபூதி டப்பாவில் கற்கள் உள்ளே புதையுமாறு 10 நாட்கள் வைத்து  எடுக்க எண்ணை ,நீர்  இறங்கி விடும்

திங்கள், 29 அக்டோபர், 2012

உடல் குளுமை பெற

வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க உடல் குளுமை பெரும் 

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மழைக்காலத்தில் உடல் வலியும், அஜீரணமும் இல்லாமல் இருக்க

மழைக்காலத்தில் உடல் வலியும், அஜீரணமும் இல்லாமல் இருக்க இஞ்சி ஒரு விரல் அளவு, மிளகு 10 (nos.), நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்து இடித்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அரை டம்ளர் சுண்டியதும் வடிகட்டி சூடாக பருகவும்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

பனங்கற்கண்டு

தினம் பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தண்ணீர் தாகமும் அடங்கும்.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

துர்நாற்றம் வராமல் இருக்க

வாஷ் பேசினிலும், கிட்ச்சன் சின்க்கிலும் பாசி உருண்டை இரண்டு போட்டு வைக்க துர்நாற்றம் வராது.

வியாழன், 4 அக்டோபர், 2012

ஊசியில் நூல் கோர்க்க

ஊசியில் நூல் கோர்க்க, அதன் காதின் பின்புறம் ஒரு வெள்ளை தாளை வைத்து சுலபமாக கோர்க்கலாம்.

திங்கள், 1 அக்டோபர், 2012

நோய் எதிர்ப்பு சக்தி

சர்க்கரைக்கு பதில் வெல்லம், பனங்கல்கண்டு, பனவெல்லம் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், எளிதில் ஜீரணமாகும்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

குக்கர் உள்ளே உள்ள கறையை போக்க

குக்கர் உள்ளே உள்ள கறையை  போக்க புளிச்சகீரை ஒரு பிடி சமைக்கும்போது அடியில் போட்டு சமைக்க உள்ளிருக்கும் கறை  போய்விடும்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

சப்பாத்தி மாவு

சப்பாத்தி மாவு திரட்டும்போது தளர்வாக  இருந்தால் அரிசி மாவு கொஞ்சம் சேர்த்து திரட்டினால் மிருதுவாகவும் நன்றாகவும் வரும் 

புதன், 19 செப்டம்பர், 2012

நமைச்சல் போக

நமைச்சல் இருக்கும் இடத்தில நல்லெண்ணெய் தேய்க்க அங்கிருக்கும் தடிப்பும் மறையும், நமைச்சலும் போய்விடும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

நூல் பிசுறுகளை நீக்க

வாஷிங் மிஷினில் துணி துவைக்கும்போது வரும் நூல் பிசுறுகளை நீக்க, கடினமான ஸ்பான்ச் வைத்து துணியில் தேய்க்கவும்.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கம்பிளி பூச்சிகள் கொட்ட

 பெருங்காயம் 50 கிராம், கல்லுப்பு கால் கிலோ, அரை பக்கெட் நீரில் இரவு போட்டு வைத்து, காலை இரண்டு பக்கெட் நீராக கலந்து முருங்கை மரத்திற்கு ஊற்ற கம்பிளி பூச்சிகள் கொட்டிவிடும். 

சனி, 18 ஆகஸ்ட், 2012

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வெண்ணெய் காய்ச்சும்போது

வெண்ணெய் காய்ச்சும்போது  கருவேப்பிலை சேர்த்து காய்ச்ச மணமாகவும் கடைசி சொட்டு வரை புதிதுபோலும் இருக்கும்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

புளி குழம்பிற்கு

புளி  குழம்பிற்கு  புளிக்கு பதில் தக்காளி , எளிமிச்சன்சாறு கலந்து செய்ய புது ருசியுடன் நன்றாக இருக்கும்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

துரு பிடிக்காமல் இருக்க

ஊசி ஆணி போட்டு வைக்கும் பெட்டியில், துரு பிடிக்காமல் இருக்க சால்க் பீஸ் இரண்டு துண்டு போட்டு வைக்கவும்.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

திங்கள், 30 ஜூலை, 2012

பித்தம் அஜீரணம் நீங்க

புதீனா, கொத்துமல்லி சேர்த்து அரைத்த துவையல் சாப்பிட பித்தம் அஜீரணம் நீங்கி புத்துணர்ச்சி தரும்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

கதவு ஜன்னல் சத்தமில்லாமல் இருக்க

வாரம் ஒரு நாள் மெசின் ஆயிலை கதவு ஜன்னல் கீல்களுக்கு விட திறந்து மூட சத்தமில்லாமல் இருக்கும்.

வியாழன், 26 ஜூலை, 2012

அலர்ஜி

சிறு குழந்தைகளுக்கு புது துணிகள் அணிவிக்கும்முன்  தண்ணீரில் நனைத்து  உலர்ந்த பின் அணிவித்தால் அலர்ஜி ஏற்படுவதை தவிர்க்கலாம் .

செவ்வாய், 24 ஜூலை, 2012

நூல் கோர்க்க

சிறு டார்ச்லைட் வெளிச்சத்தில் தையல் மிஷினில் நூல் கோர்க்க சுலபமாக இருக்கும்.

திங்கள், 16 ஜூலை, 2012

பீர்கங்காயை சுலபமாக வெட்ட

பீர்கங்காயை நீளவாக்கில் 2 ஆக வெட்டி ஸ்பூனில் வழித்து எடுக்க, சுலபமாக தோலில்லாமல் சமைத்து சாப்பிடலாம் . 

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பீர்க்கங்காய் தோல் துவையல்

பீர்க்கங்காய்  தோல்  துவையல்  :
தேவை யான பொருட்கள்
1.பீர்க்கங்காய் தோல் ஒரு கப்
2.காய்ந்த  மிளகாய் 9
3.உளுத்தம்பருப்பு 3/4 கப்
4.தேவைக கே ற் ப   உப்பு ,புளி ,பெருங்காயம்,எண்ணெய் 
செய்முறை :ஒரு வாணலியில் எண்ணையை விட்டு உளுந்தம்பருப்பு ,மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் சிறிது எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை பச்சை வாசம் போக  வதக்கி  பின் இரண்டுடனும் புளி உப்பு சேர்த்து நீர் விட்டு மிக்சியில் அரைத்து எடுக்க சுவையான துவையல் ரெடி .

புதன், 11 ஜூலை, 2012

தலைமுடி

வெள்ளை பூசணிக்காயை  உபயோகித்தபின் கை  கழுவாமல்  தலையில் வைத்தால் தலைமுடி வெளுத்துவிடும் 

திங்கள், 9 ஜூலை, 2012

காலெண்டர்

காலெண்டர் காற்றில் பறந்து சத்தம் ஏற்படுத்தாமல் இருக்க எல்லா பக்கங்களையும் சேர்த்து கிளிப் போட்டு வைக்கவும்.

புதன், 4 ஜூலை, 2012

கம்ப்யூட்டர் சாம்பிராணி

பூஜை அறையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏட்ற பெரிய அகல்விளக்கை   பயன்படுத்த சாம்பல் கீழே சிந்தாமல் தூசி பரவாமல் அதிலேயே இருக்கும்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

கைபேசி

கைபேசியை சார்ஜ்  போட்டு எடுத்த பிறகு சுவிட்சை நிறுத்தி வைக்கவும் இல்லையெனில் சார்ஜ்  பின் உடலில் பட்டால் ஷாக் அடிக்கும் மின்சாரமும்  வீணாகும் 

திங்கள், 2 ஜூலை, 2012

DVD ப்ளேயர் பழுதடையாமல் இருக்க

DVD ப்ளேயரிலும், கம்ப்யூட்டரிலும் CD ஒன்றினை போட்டு வைத்தால் பழுதடையாமல் இருக்கும். 

துரு பிடிக்காமல் இருக்க

ஆணி அல்லது சின்னச்சின்ன இரும்பு சாமான்கள் போட்டு வைக்கும் டப்பாவில் சாக் பீஸ் துண்டுகளை போட்டு வைத்தால் துரு பிடிக்காது.

சனி, 30 ஜூன், 2012

துருபிடித்த ஆணிகள் கழற்ற

துருபிடித்த ஆணிகள் கழற்ற வரவில்லை எனில் சிங்கர் ஆயில் விட்டு நன்கு ஊறியதும் துடைத்து கழற்ற சுலபமாக வரும். துருவும் நீங்கிவிடும்.

எளிய மாம்பழ ஜூஸ்

மாம்பழத்தை நன்கு கசக்கி ஓரிடத்தில் ஓட்டை போட்டு சாரை உறிஞ்சி சாப்பிட நன்றாக இருக்கும். 

குழந்தைகள் புஷ்டியாக

மெலிந்து உள்ள குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நசுக்கி பால், சர்க்கரையுடன் இரவில் சாபிடத்தர குழந்தைகள் புஷ்டியாக வருவார்கள்.

வாழைக்கறை துணியில் பட்டுவிட்டால்

வாழைக்கறை துணியில் பட்டுவிட்டால் உடனே அவ்விடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்து கசக்கி நீர் ஊற்றி அலச கரைகள் போய் உடனடியாக துணி பழைய நிலைக்கு வந்து விடும்.

செவ்வாய், 26 ஜூன், 2012

படிக்கும் குழந்தைகள்

படிக்கும் குழந்தைகள் தூங்கிவழிவதை தடுக்க  ஒரு டம்ளர் பாலில் ஒரு ஏலக்காய் தட்டி கொதிக்கவிட்டு சர்க்கரை கலந்து சூட்டுடன் தரவும்.

திங்கள், 25 ஜூன், 2012

மசால் வடை

மசால் வடை செய்யும் போது வெங்காயத்திற்கு பதில் கோஸ் சேர்த்து செய்ய வாசனையாகவும், புது ருசியுடனும் இருக்கும்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

வெண்ணை காய்ச்சும்போது

வெண்ணை காய்ச்சும்போது கருவேப்பிலை 9 அல்லது 10 இலைகள் போட்டு காய்ச்சி இலைகளை எடுத்து விடவும். கடைசி ஸ்பூன் நெய் தீரும் வரை கெடாமல் வாசனையாகவும் இருக்கும்.

வெள்ளி, 22 ஜூன், 2012

புண்ணிருந்தால்

வாயிலோ உதட்டிலோ புண்ணிருந்தால் வெண்ணையை  விடாமல் தடவி வர விரைவில் ஆறிவிடும்.

வியாழன், 21 ஜூன், 2012

வெண்ணை

வெண்ணை காய்ச்சும்போது சடசடப்பு  இல்லாமல் காய இரண்டு கல் உப்பு  போட வெண்ணை  நன்கு  காயும் .

செவ்வாய், 19 ஜூன், 2012

பொரியல் - 2

கீரை, கோஸ் பொரியல் செய்யும் போது தேங்காய்க்கு பதில் ஒரு கைப்பிடி பாசிபருப்பை வதக்கும் போதே வேகவிட்டு செய்ய சுவையுடன் நன்றாக இருக்கும்.

திங்கள், 18 ஜூன், 2012

பொரியல்

தேங்காய் சேர்த்த பொரியலை சாப்பிட முடியாதவர்கள் பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பு  சேர்த்து சாப்பிடலாம்.  

ஞாயிறு, 17 ஜூன், 2012

இன்றைய குறிப்பு

தீராத தலைவலியா?: உடனடி நிவாரணம் இதோ: கொஞ்சம் சுக்கை நீர் விட்டு இழைத்து, நெற்றியிலிருந்து புருவம் வரை தேய்த்து விட்டால் பத்தே நிமிடத்தில் வலி போயே போச்!!

இன்றைய குறிப்பு

சட்னி, துவையல் அரைக்கும்போது ஓமம் அரை ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிடச்  சுவையாகவும் இருக்கும், ஜீரணமும் ஆகும்.

கிழங்குகள் வறுக்கும்போது

சேம்பு, உருளை இப்படிப்பட்ட கிழங்குகள்  வறுக்கும்போது சிறிது கடலை மாவு அல்லது அரிசி  மாவு கலந்து வறுக்க சீக்கிரமாக வறுபட்டும் மொறுமொறுப்பாக  இருக்கும் .

புதன், 13 ஜூன், 2012

வடை மாவு

வடை மாவு நீர்துவிட்டால், ஜவ்வரிசி, சேமியா, ஓட்ஸ் என எதாவது ஒன்றை ஒரு கைப்பிடி அளவு கலந்து அரை மணி கழித்து தட்ட கெட்டியான வடை கிடைக்கும். வடையும் புது சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

பற்களுக்கு

ஐஸ் க்ரீம் சாப்பிட்ட பிறகு வெற்றிலை அல்லது பீடா  போட்டு விட்டு வாய்  கொப்புளிக்க பற்களுக்கு பாதுகாப்பு தரும் 

சனி, 9 ஜூன், 2012

புண்ணாகாமல் இருக்க

குங்குமம் வைத்த நெற்றி காது மூக்கு தொங்கட்டான்கள் போட்டு புண்ணாகாமல் இருக்க வாழைப்பழ தோலின் வெள்ளையாக இருக்கும்  உட்பகுதியை தினமும் தேய்த்து பயன்படுத்தவும்.

வெள்ளி, 8 ஜூன், 2012

புண் ஆற

காது மூக்கில் கவரிங் நகைகள் போட்டு புண்ணாவதை தவிர்க்க களிப்பாக்குடன் நீர் விட்டு இழைத்து அவ்விடத்தில் போட்டு பிறகு நகைகளை அணிய விரைவில் புண் ஆறிவரும். 

வியாழன், 7 ஜூன், 2012

கேஸ்

கேஸ் அடுப்பில் உர் உர் என்று சத்தம் வந்தால் 'சிம்'மில் வைத்து இரண்டு முறை ஊதி விட சத்தமில்லாமல் சரியாக வேலை செய்யும்.

புதன், 6 ஜூன், 2012

மாவு

இட்லி, தோசைக்கு அரைக்கும் போது, 2 வெண்டை  காயையோ , 1 பிடி காம்புகளையோ சேர்த்தால் மெத்தென்ற பதத்துடன் வரும். மூட்டு வலிக்கும் நல்லது. 

திங்கள், 4 ஜூன், 2012

நாட்டு தக்காளி

நன்கு பழுத்த நாட்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்த நல்ல புளிப்புடனும், பார்க்க அழகாகவும் இருக்கும்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

உடல் பொலிவு

காய்கள், பழங்கள் நறுக்கும்போது, வரும் சாற்றை  முகம்,  காது, கழுத்து, கை கால்கள்  மீது தேய்த்து நன்கு காய்ந்ததும் சாதாரண  நீரில்  கழுவ தோல் மேல் உள்ள அழுக்கு நீங்கி பளிச்சென்றும் மிருதுவாகவும்  இருக்கும் .வாரம் ஒரு முறை செய்ய உடல் பொலிவுடன் விளங்கும்.

சனி, 2 ஜூன், 2012

கண்களுக்கு தெரியாத கிருமிகள்

கல்லுப்பை காய்கறி பழங்கள் அலசி கழுவும் நீரில் போட்டு கழுவி எடுக்க கண்களுக்கு தெரியாத கிருமிகள் நீரில் மிதந்து வந்துவிடும். மறுமுறை நீரில் கழுவி சாப்பிடவும்.

வெள்ளி, 1 ஜூன், 2012

தூசிகளை அகற்ற

டைல்ஸ், ஜன்னல், கதவுகளில் உள்ள மண் தூசிகளை அகற்ற மீடியம் பெயிண்ட் பிரஷ் பயன்படுத்தி அகற்ற சுலபமாக வரும்.

புதன், 30 மே, 2012

நினைவாற்றல்

தூதுவளை கீரை நினைவாற்றல் தரும். அதனால் வாரம் ஒரு முறை சாம்பாரிலோ அல்லது துவையலிலோ சேர்த்து சாப்பிடவும் . இருமல் சளியை போக்கும் . உடலுக்கு சூட்டை தரும் .

செவ்வாய், 29 மே, 2012

மசாலா தயிர் சாதம்:

தேவையானவை:
காரட் - 1/2 காய் 
மாங்காய் - 1/4 காய் 
வெள்ளரிக்காய் - 1/2 காய் 
பச்சை மிளகாய் - 1 (பெரியது)
இஞ்சி - 1/2 இன்ச் 
கருவேப்பிலை - 4 இலை 
கொத்துமல்லி - 4 இலை
புதினா - 4 இலை
சீரகம் - 1/2 ஸ்பூன் 
பெருங்காயம் - 2 சிட்டிகை 
சாதம் - 1 தம்ளர் 
தயிர் - 3/4 தம்ளர் 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை:

காய்கள், இஞ்சி, ப.மிளகாய் துருவி, இலைகளை நறுக்கி, சீரகம், பெருங்காயம், உப்பு, தயிர் ஆகியவற்றை சிறிது நீருடன் கலந்து தளர பரிமாறவும்.




திங்கள், 28 மே, 2012

கால் வலிக்கு

கால் வலிக்கு எங்கு உட்கார்ந்தாலும் காலை மடித்து சப்பணமிட்டு உட்கார வலி  சிறிது சிறிதாக குறையும்,

ஞாயிறு, 27 மே, 2012

சில்லென்ற காற்றுக்கு:

வெயிலுக்கு, இரவு சன்னலில் டர்க்கி டவலை  நனைத்து பிழிந்து போட்டு படுக்க பேன் காற்றில் சூடு தணிந்து ஜில்லென இருக்கும்.

சனி, 26 மே, 2012

நோய் எதிர்ப்பு சக்திக்கு:

தினம் இரவு பாலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 3 சிட்டிகை மிளகுத்தூள், சர்க்கரை கலந்து சூட்டுடன் 1 மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து குடிக்கவும்.

புதன், 23 மே, 2012

மிளகு

1.இறந்த செல்களுக்கு உயிர் கொடுக்கும்.
2.தோல் வியாதி இருப்பவர் தினமும் சமையலில் சேர்த்து சாப்பிட உடல் தேறி புண் ஆறும்.

செவ்வாய், 22 மே, 2012

கெட்ட கொழுப்பு சேராதிருக்க

சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து 4 மிளகை மென்று சாப்பிட அடிவயிற்றில் கொழுப்பு தங்காமல், உடல் ஆரோக்யமாகவும், மெலிந்தும், அழகுடன் இருக்கலாம்.

குறிப்பு: மிளகு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து எதுவும் சாப்பிடவும். அப்பொழுதுதான் மிளகு வேலை செய்யும். நீர் மாத்திரம் குடிக்கலாம்.

திங்கள், 21 மே, 2012

மருதாணி

மருதாணியுடன் புளி அல்லது எளிமிச்சையை 2 ஸ்பூன் அளவு சாறாக எடுத்து கலந்து மெஹந்தி வைக்க நன்கு சிவக்கும், உடல் சூட்டையும் குறைக்கும் 

ஞாயிறு, 20 மே, 2012

சப்பாத்தி மாவு

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, சூடான நீரை விட்டு உப்பு, எண்ணெய் போட்டு பிசைந்து அரை மணி நேரம் மூடி வைத்து, பிறகு திறந்து நன்கு பிசைந்து சுட மெத்தென்று இருக்கும். எளிதில் ஜீரணம் ஆகும்.

வெள்ளி, 18 மே, 2012

தோல் பொருட்கள்


தோல் பொருட்கள்  மீது தேங்காய் எண்ணையை ஒரு பருத்தி துணியில்   தொட்டு  துடைக்க பளிச் என  இருக்கும்

வியாழன், 17 மே, 2012

செவ்வாய், 15 மே, 2012

புளிக்கு பதில்

புளிப்புள்ள கீரை, காய், பழங்கள் சேர்த்து சமைக்கலாம். புளி இரத்தம் சுண்டும், அதனால் புளிப்பு சுவைக்கு இப்படி செய்ய உடம்பிற்கும் நல்லது.

ஞாயிறு, 13 மே, 2012

உருளை ரவுண்டு பொரியல்

உருளை ரவுண்டு பொரியல்: உருளை கிழங்கை வட்டவட்டமாக அரிந்து   ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அரிந்த காய்களை போட்டு சிறிது வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள் தூள்களுடன் உப்பும் தேவைக்கேற்ப சேர்த்து காய் மூழ்குமளவு நீர் விட்டு, வாணலியை மூடி வேகவைத்து, நீர் சுண்டியதும் சிறிது பெருங்காய தூள் சேர்த்து தோசைகல்லில் எண்ணெய் விட்டு, 6 ,7  வில்லைகளாக போட்டு வறுத்து, மறுபுறமும் திருப்பி வறுத்தெடுத்து சாப்பாட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சனி, 12 மே, 2012

ஹேர் பின் வளைந்து விட்டால்

ஹேர் பின் வளைந்து விட்டால், வாசக்கதவின் ஓரம் இணைத்துப்  பிடித்து கதவை மெல்ல மூடி திறந்து ஹேர் பின் பெண்டை சரி செய்து மீண்டும் உபயோகிக்கலாம்.

வெள்ளி, 11 மே, 2012

பெயிண்ட் வாசம் போக

பீரோ, அலமாரியில் பெயிண்ட் அடித்த வாசம்  போக ஊதுபத்தியின் காலி பாக்கெட்டுகளை போட்டு வைக்கவும் 

வியாழன், 10 மே, 2012

புதன், 9 மே, 2012

பீங்கான் பாத்திரம்

பீங்கான் பாத்திரத்தை induction & gas stove- இலும் பயன் படுத்தலாம். டிசைன் போட்டிருந்தாலும் பயன்படுத்தலாம்.

செவ்வாய், 8 மே, 2012

கரப்பானை கொல்லாமல் ஒழிக்க (2)

கரப்பானை கொல்லாமல் ஒழிக்க  போரிக் பவுடர் (boric  acid ) போட்டாலும்  இரவில் எங்கெங்கு கரப்பான் வருகிறதோ  அங்கெல்லாம் தூவி விட்டாலும் ஓடிவிடும்.

திங்கள், 7 மே, 2012

கரப்பானை கொல்லாமல் ஒழிக்க

லைப்பாய் நீம் Handwash liquid சிறிது நீருடன் கலந்து தெளிக்க அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி விடும்.

ஞாயிறு, 6 மே, 2012

காரப்பொரி

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணையை சுடவைத்து, கட்ட மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் ரெண்டு சிட்டிகை, பெருங்காய தூள் 2 சிட்டிகை, உப்பு (டேபிள் சால்ட்) தேவைக்கேற்ப, 2 பல் பூண்டு தட்டி போட்டு 3 நிமிடங்கள் வறுத்து 2 ஆழாக்கு (டம்ளர்) பொரியை கொட்டி கிளறவும். அப்படி கிளறும்போதே இதனுடன் வறுத்த வேர்கடலை 1 கரண்டி, அவல் 1/2 டம்ளர், உடைத்த கடலை 1 கரண்டி போட்டு கிளறி இறக்கவும்.

வெள்ளி, 4 மே, 2012

திங்கள், 30 ஏப்ரல், 2012

நினைவாற்றலுக்கு

தினமும் வெறும் வயிற்றில்  ஐந்து பாதாம் பருப்புகளை சாப்பிட்டு பால் குடித்தால் நினைவாற்றல் பெருகும், பலமும் வரும்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வயிற்றுபுண் ஆறுவதற்கு:

புழுங்கல் அரிசி இரண்டு டம்ளர் எடுத்து கழுவி நன்கு காயவைத்து அதனுடன்  கால் டம்ளர் வெந்தையத்தை சேர்த்து ரவை பதத்துக்கு மெசினில் அரைத்து வைத்து தினமும் தேவையான அளவுக்கு கஞ்சியாக காய்ச்சி 21  நாள்  விடாமல் சாப்பிட புண் ஆறிவிடும் .

ஞாயிறு, 18 மார்ச், 2012

உடல் சூட்டை குறைக்க

 உடல் சூட்டை குறைக்க: வெள்ளை சுண்ணாம்பு எடுத்து தொப்புளிலும், தொப்புளை சுற்றியும், கால் பெருவிரல் நகங்களிலும் நீர்க்கத் தடவினால், உடனடியாக சூடு குறையும்.

சனி, 17 மார்ச், 2012

வாய் துர்நாற்றம் நீங்க

வாழ்க வளமுடன்!

வாய் துர்நாற்றம் எடுத்தால், தினமும் பச்சை புதினா தொடர்ந்து 41 நாள் மென்று  சாப்பிட அகலும். முகமும் அழகுபெறும், பற்கள் ஆரோக்கியம் ஆகும், சுறுசுறுப்பும் வரும்.