புதன், 4 ஜூன், 2014

Isha Elango



Source:

Isha Elango

http://ift.tt/1ha4UpW

சரபேஸ்வரர் யார்? யஸ்த் த்விதம் நாம ஸாகஸ்ரம் ஸக்ருத் படதி பக்தி மாந்தேஷாம் தஸ்ய யே சுத்ரவஸ்த் நிஹந்தா சரபேஸ்வர: என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உத்திர பாகத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம்:- எவர் ஒருவர் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை பக்தியோடு ஒரு தடவை படிக்கிறாரோ அவருக்கு யார் சத்ருக்களோ அவர்களை சரப மூர்த்தி நாசம் செய்கிறார். ஸ்ரீ சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சமே. ஆகவே கால பைரவாஷ்டகத்தையும் அச்சமயம் கூறிவழிபடலாம். ************************************************************************************* இரணியனை வதம் செய்த நரசிம்மரின் ஆவேசம் தணியாமல் இருந்ததைக் கண்டு சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டினர். அவர் சரபப் பறவை போல் உருவமெடுத்து நரசிம்மரை நெருங்கினார். பின்னர் நரசிம்மர் உக்கிரம் அடங்கி சாந்தமானார். எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கம் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராய் இவர் தோன்றினார். சரபம் போல் உருவமெடுத்த இவரை சரபேஸ்வரர் என்றனர். மன அமைதி கிடைக்க, பய உணர்வு குறைய, வழக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக