திங்கள், 30 ஜூன், 2014

Devarajan Natarajan



Source:

Devarajan Natarajan

http://ift.tt/1nWzwbt

இந்து மத நுட்பங்கள்: (வியாசர், வியாசம், புராணங்கள், இதிகாசங்கள்): * 'வியாசம்' என்ற பதத்துக்கு 'பிரித்தல்' அல்லது 'பகுத்தல்' என்று பொருள். 'வியாசர்' என்னும் சொல் பதவியைக் குறிக்க வந்தது. வியாசம் செய்பவர் 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * சதுர்யுகம் என்று அழைக்கப் பெறும் நான்கு யுகங்களில் (கிருத, திரேதா, துவாபர, கலி). துவாபர யுகம் வரையிலும் வேதங்கள் பிரிவுகள் ஏதுமின்றி ஒரே தொகுப்பாக விளங்கும். ஒவ்வொரு துவாபர யுகத்திலும் ஒரு மாமுனிவர் தோன்றி வேதங்களை நான்காக பிரிப்பார் (ரிக், யஜூர், சாம, அதர்வனம்). அம்முனிவரே 'வியாசர்' என்று அழைக்கப் படுவார். * 71 சதுர்யுகங்களை கொண்டது ஒரு மன்வந்திரம். தற்பொழுது நடப்பது 'வைவசுவத' மன்வந்திரம். நாம் இருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். 28 மாமுனிவர்கள் இது வரை 'வியாசர்' பதவியை வகித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஸ்ரீவிஷ்ணு புராணம் பட்டியலிடுகிறது. * இந்த சதுர்யுகத்தில் பராசர முனிவரின் புதல்வரான 'கிருஷ்ணத் துவைபாயனர்' வேதங்களை பிரித்ததால் 'வேத வியாசர்' என்று போற்றப் படுகிறார். * 18 புராணங்களையும், பற்பல உப புராணங்களையும் வடமொழியான சமஸ்கிருதத்தில் இயற்றி அருளியவர் வேத வியாசர். * நிகழ்வுகள் நடைபெறும் காலத்திலேயே அவை தொகுத்து எழுதப்படுவது இதிகாசங்கள் என்று பெயர் பெறும். நிகழ்வுகள் நடந்தேறிய பின்பு வேறு ஒரு கால கட்டத்தில் அந்நிகழ்வுகள் முறைப்படுத்தப் பட்டு எழுதப் படுவது புராணங்கள் என்று அழைக்கப் பெறும். * இதிகாசங்கள் 2 (ஸ்ரீமகாபாரதம், ஸ்ரீராமாயணம்). ஸ்ரீராமாவதாரக் காலத்தில் வாழ்ந்த வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதி அருளியது ஸ்ரீராமாயணம். மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறிய காலத்தில் வாழ்ந்த வேத வியாசர் விநாயகக் கடவுளின் உதவியோடு வட மொழியில் எழுதி அருளியது ஸ்ரீமகாபாரதம். * தெய்வத் தமிழ் மொழியில் 'இராம காவியத்தை பாடி அருளியவர் கவிச் சக்கரவர்த்தி கம்பர், மகாபாரத இதிகாசத்தை இயற்றி அருளியவர் வில்லிபுத்தூர் ஆழ்வார், கந்த புராணத்தை இயற்றியருளிய அருளாளர் கக்சியப்ப சிவாச்சாரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக