சனி, 10 மே, 2014

பஞ்ச பூதங்கள்



Source:

பஞ்ச பூதங்கள்

http://ift.tt/1l1g8IX

இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம். தண்ணீர் பிரச்னை தீரவும், மின்சாரம் பெருகவும் தமிழகம் வளமான பூமியாகவும் நதி நீர் இணைப்பு அவசியம் தண்ணீர் எல்லா பிரச்னைகளுக்கும் தலையாயது என்பதை நாம் உணர வேண்டும். நமது நாடு விவசாய நாடு, உணவு உற்பத்திக்காக நாம் வெளிநாடுகளில் கையேந்தி நின்றால் நமது பொருளாதாரம் சீக்கிரம் வீழ்ந்துவிடும் என்பதை மறக்கக்கூடாது. தண்ணீர் மேலாண்மை சரிவர செய்யாத நாடுகள் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. `பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்' என்பது முன்னோர் மொழி, பஞ்சம் ஏற்பட்டால் மக்கள் ஏதுவும் செய்து பசியை போக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, தண்ணீர் மேலாண்மை பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டும், விரைந்து செயலாற்ற வேண்டும். நம்மைப்போல 60 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்த நாடுகளில் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சியின் உச்சத்தை அடைந்துள்ளன என்பதை நாம் மறக்கக்கூடாது. நமது நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே உண்மை. தமிழக நதிகளை இணைத்தாலே பெருமளவில் நதி நீரின்றி ஏற்படும் வறட்சி, பஞ்சம், வெள்ளத்தால் ஏற்படும் சேதம் இரண்டும் தீர்ந்துபோகும். அதுமட்டுமல்ல நீர் மின்சாரம் பெருகுவதுடன், நிலத்தடி நீர் உயர்ந்தால் மின்சார செலவும் குறைந்து மின் மிகை மாநிலமாக மாறும். எனவே, பொறியாளர் திரு. ஏ.சி. காமராஜ் அவர்கள் தயாரித்துள்ள தமிழ்நாடு நீர் வழித் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஓடும் 17 சிறிய, பெரிய நதிகளை இணைக்க, நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதனை ஆராய்ந்துள்ளார் திரு. காமராஜ். முதல் கட்டமாக சிறிய முதலீட்டில் இதனை துவக்கினாலே அடுத்த அடுத்த ஆண்டுகளில் அதனால் ஏற்படும் பலன்களைக் கொண்டே மீதி திட்டத்தையும் முறையாக செயல்படுத்திவிடலாம். கோவாவிலும், குஜராத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ள நதி நீர் இணைப்பு நல்ல பலன்களைத் தந்து வருகிறது. அதுபோல தமிழகத்திலும் செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. பாலாறு, பொன்னையாறு, காவேரி, உப்பர் ஓடை, அமராவதி, சண்முகாநதி, பாம்பார், வட்டாறு, நல்லதங்காள் ஓடை, கொடகனாறு, வைகை ஆறு, காயுண்டான், குண்டாறு, அர்ஜுனா, தாமிரபரணி, மற்றும் சிற்றாறுகளை இணைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கு கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு, நீரில்லாத பகுதி தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்படும். இத்தோடு மழை நீர் சேகரிப்பை ஒழுங்கப்படுத்திட திட்டமிடவும், தேவையான சட்டங்களை இயற்றி மக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். மாநகரங்களில் மழை நீர் கால்வவாயாக அமைக்கப்பட்டவை கழிநீர் வாய்காலாகவே பயன்படுகிறது. கழிநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வெளியில் கொட்டும் கழிநீரை மழை நீர் கால்வாயில் திருப்பி விடுகின்றனர். இதனால் கொசு உற்பத்தியே பெருகிவருகிறது. வருடந்தோறும் தூர்வாறும் பணிக்கே மாநகராட்சிகள் பல லட்சம் செலவு செய்கிறது. தூசு மணலை அப்புறப்படுத்தி, கட்டிட இடிப்பாடுகளை சாலையில் கொட்டுவதை தடை செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால், மழை நீர் கால்வாய் பயன்பாட்டுக்கு வரலாம். பலமாடி கட்டிடங்களின் இடத்திற்கு ஏற்ப மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தவும், கட்டிட வரைபடத்திலேயே மழை நீர் சேமிப்பிற்காகன அமைப்பை இடம்பெற செய்வதை முறைப்படுத்தினால்இது நடைமுறைக்கு வரும். வருடந்தோறும் பொது நல தொண்டர்களின் குழுவைக் கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா நிலையிலும் லஞ்சம், முறைகேடுகளை ஒழித்தால் அன்றி எந்த திட்டமும் பலன் தராது. ஊழலற்ற செயல்பாட்டிற்கு அரசு உத்திரவாதம் அளிக்கும் நிலையே நல்ல நிர்வாகத்தின் அடிப்படை. அப்போதுதான் நல்ல திட்டங்கள் நிறைவேறி, பலனும் தரும். மழை நீர் சேகரிப்பை நல்லமுறையில் பயன்படுத்தினால் நிலத்தடி நீர் உயரும். 120 அடி தூரத்திலிருந்து 50 அல்லது 60 அடிக்கே நீர் கிடைக்கும் என்றானால், மீன்சாரம் பாதி அளவே செலவாகும். இவ்விரண்டையும் விரைந்து செயலாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்றும் தேசிய, தெய்வீகப் பணியில் பத்திரிகை அறிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக