வியாழன், 22 மே, 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1i6ObP9

தீ மிதி எதற்காக? ‌ தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா. குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக