திங்கள், 26 மே, 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

வாழ்கவளமுடன்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1oykXOg

நாம் பல சாதனைகளைப் புரிகிறோம். சிலவற்றுக்காக பாராட்டப்படுகிறோம், பல பாராட்டைப் பெறுவதில்லை. கீதை சொல்கிறது ""கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்று. ஆனால், பாழும் மனம் என்னவோ புகழைத் தேடி பேயாய் அலைகிறது. பல சாதனைகள் செய்தும் அதற்கான பலனை எதிர்பாராமல் வாழும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் புகழடையா விட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சினிமா நடிகர் அல்லது நடிகையின் பெயரைச் சொன்னதுமே இவர் இன்னார், இன்ன படத்தில் நடித்துள்ளார், இன்ன காட்சியில் சிறப்பாக நடிப்பார் என்றெல்லாம் பிளந்து கட்டி விடுகிறோம். டாக்டர் ஜோனாஸ் சால்க் என்பவரும் இருந்தார். "யார் அவர்?' என்றால், பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே! இன்று உலகில் பல மனிதர்கள் ஒழுங்காக நடமாடக் காரணமே இவர் தான். ஆம்...இவரும் இவரது குழுவினரும் தான் போலியோவைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்தனர். புளூகாய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் பணியையும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவரிடம் ஒப்படைத்தது. அந்த மருந்தைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தனது சாதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். நம்மூர் காந்திஜிஜையே மறந்து விட்ட நாம், இவரை ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை தான்! இனியாவது ஒவ்வொரு போலியோ முகாம் நடக்கும் போதும் இவரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாதனைகள் மூலம் நாம் புகழ் பெறலாம், பரிசுகள் பெறலாம். இதெல்லாம் நமது ஆத்ம திருப்திக்காகவே. ஆனால், நமது கண்டுபிடிப்பு அல்லது சேவை மூலம், முகம் தெரியாத கோடிக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள் என்றால், அதை விட ஆத்மதிருப்தி வேறென்ன வேண்டும்! ஊருக்காக வாழ்பவர்களுக்கு இறைவனின் இதயத்தில் இடஒதுக்கீடு உண்டு. அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக