செவ்வாய், 27 மே, 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1hsDHcQ

நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும் பிறப்பில்லாத நிலை வேண்டும், கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பாகவதர் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த ஒரு பக்தர் எழுந்து,""நீங்கள் சொல்வது சரி. பிறப்பற்ற நிலையை அடைய ஒரு வழியைச் சொல்லுங்களேன்!'' என்றார். ""ஒரு கதையைக் கேள். சிங்கம் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசிக்க ஆசைப்பட்டது. அது முதல் மலையில் நின்றது. ஏழாவது மலைக்கு தாவி விட்டால் வெங்கடாஜலபதியைப் பார்த்து விடலாம். அப்போது, ஒரு எறும்பு வந்தது. அதற்கும் ஏழுமலையானை தரிசிக்க ஆசை. "சிங்கம் மலையைத் தாண்டி பகவானைப் பார்த்து விடும். என்னால் அது எப்படி சாத்தியம். நான் ஊர்ந்து சென்றால் பலநாட்கள் ஆகி விடுமே! வழியில், யாரும் மிதித்து விட்டால், மீண்டும் இன்னொரு பிறவி எடுத்து...' இப்படி சிந்தித்த எறும்புக்கு "டக்'கென ஒரு யோசனை வந்தது. சிங்கத்தின் உடலில் ஒட்டிக்கொண்டால், அது தாவும் போது நாமும் ஏழுமலையைத் தாண்டி விடுவோம். அவன் தரிசனம் கிடைத்தால் பிறவிப்பிணி தீரும் என்று எண்ணியது. அதன்படியே செய்து தரிசனம் பெற்றது. இதுபோலத் தான், நீயும் மகான்கள் நடத்தும் பிரார்த்தனையில் கலந்து கொள். அவரையே மானசீக குருவாக ஏற்றுக்கொள். அங்கே கேட்கும் நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக