பெயிண்டிங் பிரஷ் பெரிதும் சிறிதுமாக 2 வாங்கி வைத்துக் கொண்டால், எலெக்ட்ரிக் கூக்கர், ப்ரிட்ஜ் டப், மிக்ஸி போன்ற இன்னும் பல எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்கல் பொருட்கள், ஜன்னல், கதவு போன்ற கை நுழையாத இடங்களில் சுத்தம் செய்யலாம்.
சனி, 30 ஏப்ரல், 2011
வெள்ளி, 29 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
வாஷ்பேசின், சாமான் துலக்கும் sink போன்ற இடங்களில் நேப்தலின் பால்ஸ் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது. துர்நாற்றமும் இருக்காது.
வியாழன், 28 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
பலாசுளையை தேனுடன் சாப்பிட வயிற்று வலி வராது. வெறும் சுளைகளாக சாப்பிட்டால் சூட்டைக் கிளப்பி வயிற்று வலி வரும்.
புதன், 27 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
தலையில் அடிபட்டு முடி முளைக்காமல் இருந்தால்: அவ்விடத்தில் ஒற்றைச் சிவப்பு நிற செம்பருத்திப் பூவை தேய்த்துவர நாளடைவில் முடி வளர ஆரம்பிக்கும். மீண்டும் முடி வளர ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடவும்.
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
நகச்சொத்தையும் வெடிப்பும் உஷ்ணமும் போக: பச்சை மருதாணி இலைகளை அரைத்து கை விரல்களுக்கு தொப்பிபோல் வைத்து, உள்ளங்கையிலும், உள்ளங்கால்களிலும் வட்டமாக இட்டு, கால் விரல்களுக்கும், பாதம் சுற்றிலும், மற்றும் வெடிப்புகள் உள்ள இடங்களிலும் இட்டு 3 அல்லது 5 மணிநேரம் கழித்து கழுவிவிட அழகாகவும் இருக்கும், உபாதைகளும் தீரும்.
குறிப்பு: மருதாணி போட்டபின் அவ்வப்பொழுது எலுமிச்சை நீர் விட்டுகொண்டிருக்க, நன்கு சிவந்து, உடல் குளிர்ச்சிபெறும்.
திங்கள், 25 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
சின்ன வெங்காயத்தை அரியாமல் நசுக்கிப்போட்டால், சுவையும் பிரமாதமாக இருக்கும், வேலையும் சுலபமாகிவிடும்.
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
பெரிய வெங்காயத்தை இருபுறமும் அறிந்துவிட்டு வேற்பகுதியிலிருந்து உரிக்க சுலபமாக உரிக்கவரும். அதேபோல் சின்னவெங்காயத்தை இருபுறமும் நறுக்கி நீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து கையில் நசுக்க தோல் உறிந்துவிடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)