மாம்பழத்தை நன்கு கசக்கி ஓரிடத்தில் ஓட்டை போட்டு சாரை உறிஞ்சி சாப்பிட நன்றாக இருக்கும்.
சனி, 30 ஜூன், 2012
குழந்தைகள் புஷ்டியாக
மெலிந்து உள்ள குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நசுக்கி பால், சர்க்கரையுடன் இரவில் சாபிடத்தர குழந்தைகள் புஷ்டியாக வருவார்கள்.
வாழைக்கறை துணியில் பட்டுவிட்டால்
வாழைக்கறை துணியில் பட்டுவிட்டால் உடனே அவ்விடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்து கசக்கி நீர் ஊற்றி அலச கரைகள் போய் உடனடியாக துணி பழைய நிலைக்கு வந்து விடும்.
செவ்வாய், 26 ஜூன், 2012
படிக்கும் குழந்தைகள்
படிக்கும் குழந்தைகள் தூங்கிவழிவதை தடுக்க ஒரு டம்ளர் பாலில் ஒரு ஏலக்காய் தட்டி கொதிக்கவிட்டு சர்க்கரை கலந்து சூட்டுடன் தரவும்.
திங்கள், 25 ஜூன், 2012
மசால் வடை
மசால் வடை செய்யும் போது வெங்காயத்திற்கு பதில் கோஸ் சேர்த்து செய்ய வாசனையாகவும், புது ருசியுடனும் இருக்கும்.
ஞாயிறு, 24 ஜூன், 2012
வெண்ணை காய்ச்சும்போது
வெண்ணை காய்ச்சும்போது கருவேப்பிலை 9 அல்லது 10 இலைகள் போட்டு காய்ச்சி இலைகளை எடுத்து விடவும். கடைசி ஸ்பூன் நெய் தீரும் வரை கெடாமல் வாசனையாகவும் இருக்கும்.
வெள்ளி, 22 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)