தேங்காய் சேர்த்த பொரியலை சாப்பிட முடியாதவர்கள் பாசிபருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து சாப்பிடலாம்.
திங்கள், 18 ஜூன், 2012
ஞாயிறு, 17 ஜூன், 2012
இன்றைய குறிப்பு
தீராத தலைவலியா?: உடனடி நிவாரணம் இதோ: கொஞ்சம் சுக்கை நீர் விட்டு இழைத்து, நெற்றியிலிருந்து புருவம் வரை தேய்த்து விட்டால் பத்தே நிமிடத்தில் வலி போயே போச்!!
இன்றைய குறிப்பு
சட்னி, துவையல் அரைக்கும்போது ஓமம் அரை ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிடச் சுவையாகவும் இருக்கும், ஜீரணமும் ஆகும்.
கிழங்குகள் வறுக்கும்போது
சேம்பு, உருளை இப்படிப்பட்ட கிழங்குகள் வறுக்கும்போது சிறிது கடலை மாவு அல்லது அரிசி மாவு கலந்து வறுக்க சீக்கிரமாக வறுபட்டும் மொறுமொறுப்பாக இருக்கும் .
புதன், 13 ஜூன், 2012
வடை மாவு
வடை மாவு நீர்துவிட்டால், ஜவ்வரிசி, சேமியா, ஓட்ஸ் என எதாவது ஒன்றை ஒரு கைப்பிடி அளவு கலந்து அரை மணி கழித்து தட்ட கெட்டியான வடை கிடைக்கும். வடையும் புது சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்.
ஞாயிறு, 10 ஜூன், 2012
பற்களுக்கு
ஐஸ் க்ரீம் சாப்பிட்ட பிறகு வெற்றிலை அல்லது பீடா போட்டு விட்டு வாய் கொப்புளிக்க பற்களுக்கு பாதுகாப்பு தரும்
சனி, 9 ஜூன், 2012
புண்ணாகாமல் இருக்க
குங்குமம் வைத்த நெற்றி காது மூக்கு தொங்கட்டான்கள் போட்டு புண்ணாகாமல் இருக்க வாழைப்பழ தோலின் வெள்ளையாக இருக்கும் உட்பகுதியை தினமும் தேய்த்து பயன்படுத்தவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)