எந்த பழம் வெட்டினாலும் அந்த சாறை முகம், கை, கழுத்து மற்றும் காலிலும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவிவிட மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
ஞாயிறு, 15 மே, 2011
செவ்வாய், 10 மே, 2011
இன்றைய குறிப்பு
போட்டோ சுற்றிலும் வேப்பெண்ணை தடவிட பூச்சி அரிக்காமல் இருக்கும். சுவாமி படங்களுக்கும் செய்யலாம்.
திங்கள், 9 மே, 2011
இன்றைய குறிப்பு
தினம் பால் காய்ச்சும்போது வரும் பாலேட்டினை சிறிது தயிர் உறைவிட்டு ஒரு வாரம் பிரீசரில் வெய்க்கக் கெடாமல் நன்றாக இருக்கும். இதைக் கடைந்து வெண்ணை எடுக்கலாம்.
ஞாயிறு, 8 மே, 2011
இன்றைய குறிப்பு
பெரிய வெங்காயம் சுலபமாக உரிக்கவேண்டுமானால் இருபுறமும் வெட்டி நீரில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து தோல் உரித்து கழுவி நறுக்க தோலும் சுலபமாக வரும் கண்களில் நீர் வடியாது.
சனி, 7 மே, 2011
இன்றைய குறிப்பு
பாட்டில், கண்டைனர் திறக்கமுடியவில்லயானால், வாயால் மூடி சுற்றிலும் ஊதினால் சுலபமாக திறக்கலாம்.
வெள்ளி, 6 மே, 2011
இன்றைய குறிப்பு
தலைக்குளிக்க கால் கிலோ சீக்காயுடன் ஒரு கிலோ அரிசி, ஐம்பது கிராம் வெந்தயம், சேர்த்து கொரகொரவென்று அரைத்து ஒரு தலைக்கு வேண்டியளவு எடுத்து அதில் முக்கால் பங்கு சீக்காய்தூள் எடுத்து கொதிநீரை கொட்டி நன்கு கிளறி சிறிது சூடாறியபின் வேண்டிய அளவு நீர் கலந்து தலை கசக்க எண்ணெய் விட்டு முடி சுத்தமாகவும், பளபளவெனவும், மெத்தென்றும் இருக்கும்.
வியாழன், 5 மே, 2011
இன்றைய குறிப்பு
தேங்காய் பர்பி செய்து திறக்கும் தருவாயில், பன்னீர் தெளித்து கிளறி தட்டில் கொட்டி ஆறவிட்டு வில்லைபோட்டு சாப்பிட வாயில் கரையும் அளவு ருசியாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)