பெயிண்டிங் பிரஷ் பெரிதும் சிறிதுமாக 2 வாங்கி வைத்துக் கொண்டால், எலெக்ட்ரிக் கூக்கர், ப்ரிட்ஜ் டப், மிக்ஸி போன்ற இன்னும் பல எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்கல் பொருட்கள், ஜன்னல், கதவு போன்ற கை நுழையாத இடங்களில் சுத்தம் செய்யலாம்.
சனி, 30 ஏப்ரல், 2011
வெள்ளி, 29 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
வாஷ்பேசின், சாமான் துலக்கும் sink போன்ற இடங்களில் நேப்தலின் பால்ஸ் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது. துர்நாற்றமும் இருக்காது.
வியாழன், 28 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
பலாசுளையை தேனுடன் சாப்பிட வயிற்று வலி வராது. வெறும் சுளைகளாக சாப்பிட்டால் சூட்டைக் கிளப்பி வயிற்று வலி வரும்.
புதன், 27 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
தலையில் அடிபட்டு முடி முளைக்காமல் இருந்தால்: அவ்விடத்தில் ஒற்றைச் சிவப்பு நிற செம்பருத்திப் பூவை தேய்த்துவர நாளடைவில் முடி வளர ஆரம்பிக்கும். மீண்டும் முடி வளர ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடவும்.
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
நகச்சொத்தையும் வெடிப்பும் உஷ்ணமும் போக: பச்சை மருதாணி இலைகளை அரைத்து கை விரல்களுக்கு தொப்பிபோல் வைத்து, உள்ளங்கையிலும், உள்ளங்கால்களிலும் வட்டமாக இட்டு, கால் விரல்களுக்கும், பாதம் சுற்றிலும், மற்றும் வெடிப்புகள் உள்ள இடங்களிலும் இட்டு 3 அல்லது 5 மணிநேரம் கழித்து கழுவிவிட அழகாகவும் இருக்கும், உபாதைகளும் தீரும்.
குறிப்பு: மருதாணி போட்டபின் அவ்வப்பொழுது எலுமிச்சை நீர் விட்டுகொண்டிருக்க, நன்கு சிவந்து, உடல் குளிர்ச்சிபெறும்.
திங்கள், 25 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
சின்ன வெங்காயத்தை அரியாமல் நசுக்கிப்போட்டால், சுவையும் பிரமாதமாக இருக்கும், வேலையும் சுலபமாகிவிடும்.
ஞாயிறு, 24 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
பெரிய வெங்காயத்தை இருபுறமும் அறிந்துவிட்டு வேற்பகுதியிலிருந்து உரிக்க சுலபமாக உரிக்கவரும். அதேபோல் சின்னவெங்காயத்தை இருபுறமும் நறுக்கி நீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து கையில் நசுக்க தோல் உறிந்துவிடும்.
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
பிரிட்ஜின் பிரீசரில் பேப்பர் போட்டு அதன்மேல் பாத்திரங்களை வெய்த்தால் பாத்திரங்கள் ஒட்டாமல் சுலபமாக எடுக்க வரும்.
வியாழன், 21 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
அரிசி குக்கரில் வேகவைக்கும்பொழுது நான்கு உப்புக்கற்கள் போட்டு வேகவைத்தால் வாய்வு ஏற்படாது. அதற்கேற்றாற்போல் குழம்பு, ரசத்தில் உப்பைக் குறைத்துக்கொள்ளவும், சுவையும் நன்றாக இருக்கும்.
புதன், 20 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
முகப்பூச்சு (மேக்-அப்) போடுவதற்கு முன் பிரிட்ஜில் வைத்த நீர் அல்லது ஐஸ் கட்டியை முகத்தில் தடவி ஆறவிட்டு பிறகு முகப்பூச்சு போட நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.
திங்கள், 18 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து குளுமை தரும். உடல் குளிர்ந்த பிறகு வெள்ளரிக்காய் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவோ அல்லது நிருத்திக்கொள்ளவோ செய்யலாம்.
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
கண்ணாடி வளையலைக் கொதிக்கவைத்த நீரில் போட்டு ஆறியவுடன் எடுக்க, என்றும் புதிதுபோல் நீண்ட நாட்கள் உடையாமல் இருக்கும்.
சனி, 16 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
கண்ணை சுற்றி கருவளையம் இருந்தால், உருளைகிழங்கை வெட்டி அப்படியே (தினமும்) தேய்த்துவர நாளைடைவில் மறைந்துவிடும்.
புதன், 13 ஏப்ரல், 2011
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
இன்றைய குறிப்பு
நெற்றியில் பொட்டிடும் இடத்தில் அரிப்பு வராமலிருக்க: கலி பாக்கினை நீரில் இழைத்துப் பொட்டிடும் இடத்தில் தடவி அதற்கு மேலே பொட்டிட, நாளடைவில் அரிப்பும், புண் அடையாளம் ஏதும் இருப்பின் மறைந்துவிடும். இல்லாவிடில், வாழைப்பழத் தோலினை (வெள்ளையான உட்புறப் பகுதி) தேய்த்து வந்தால் சரியாகிவிடும்.
ஜெயம்மா.
கேள்விக்களம்
இன்று தொடங்கி கேள்விக்களத்தில் நீங்கள் கேட்கும் அழகு, உடல்நலம், சமையல் மற்றும் வீட்டை பராமரித்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.
ஜெயம்மா.
ஜெயம்மா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)